திருவள்ளூர் அடுத்த வீரராகவபுரத்தில் வாய் பேச முடியாத முதிவரிடம் வீடு கட்ட விடாமல் கொலை மிரட்டல் விடுத்து,சொத்து அபகரிக்க முயற்சி செய்வதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் புகார் மனு :

பதிவு:2022-07-21 22:29:27

திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் அடுத்த வீரராகவபுரத்தில் வாய் பேச முடியாத முதிவரிடம் வீடு கட்ட விடாமல்,கொலை மிரட்டல் விடுத்து,சொத்து அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெகேர்லா செபாஸ் கல்யாண் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது :

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரராகவபுரம் காட்ராயகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் கௌரி கணவர் மோகன். இவர் வாய் பேச முடியாத‌ மாற்றுத்தினாளி.இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் 25 வருட காலமாக ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுடைய ஏழ்மையான நிலையை அறிந்த அரசு இவர்களுக்கு சிமெண்ட் காங்கிரீட் வீடு ஆணை வழங்கிய நிலையில் வீடு கட்டுவதற்காக குடிசை வீட்டை இடித்துவிட்டு கடக்கால் தோண்டிய போது இவர்களுடைய பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாரதி,பரந்தாமன்,சின்னபோல்ரெட்டி,பெரியபோல் ரெட்டி,பாஸ்கர்,நந்தா ஆகிய 6 நபர்கள் இந்த நிலத்தில் எங்களுக்கு பாகம் உள்ளதாகவும் இங்கே வீடு கட்டினால் கொலை செய்து விடுவதாக கௌரியை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக திருவாலங்காடு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் இது சம்பந்தமான ஆறு நபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரித்து சமரசம் பேசியும் எழுதியும் வாங்கிக் கொண்ட‌ பிறகும் வீடு கட்ட விடாமல் அவர்களை தடுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து என் வீட்டுமனையில் அரசாங்கம் வழங்கும் மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள அனுமதிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெகேர்லா செபாஸ் கல்யாண் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.