பதிவு:2022-07-24 18:25:01
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூரில் மாவட்ட பாஜக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா தலைமை வகித்தார். திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் மின் கட்டணத்தை 39 சதவிகிதம் வரை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ராஜ்குமார், மகளிர் அணி மாநில பொருளாளர் ஜெ.மாலினி ஜெயச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் இரா.கருணாகரன், முல்லை ஞானம், லயன் ஸ்ரீனிவாசன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், வக்கீல் கோ.சீத்தாராமன், எஸ்.வடிவேல், லலிதா பாபு, சங்கீதா, எஸ்.கே.சண்முகம் மற்றும் நகர தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.