பதிவு:2022-07-24 18:28:36
திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்வது குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடல்
திருவள்ளூர் ஜூலை 24 : சில்ரன் பிலீவ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள் மூலம் வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றது. இளம் வயதினர் சமுதாயத்தில் தன்னம்பிக்கை வளர்த்து கொண்டு, பயம் இல்லாமல் கனவு காண்பதற்கும்,தன்னம்பிக்கை வளர்ப்பதற்கும் ,குழந்தை உரிமைகள் பாதுகாப்பதற்கும்,குழந்தைகள் கருத்திற்கு மதிப்பளித்தல் போன்ற பணிகளை சில்ரன் பிலீவ் செய்து வருகிறது.
கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் உள்ளூர் செயல்பாட்டிற்கான கனடா நிதி திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவில் இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பதின் மூலம் காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளுதல் மற்றும் கார்பனை குறைத்தலை நோக்கமாக கொண்டு தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் மற்றும் ஆந்திரபிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 110 கிராமங்களில் ஸ்பீச்,ஐ.ஆர்.சி.டி.எஸ் மற்றும் ரோப்ஸ் தொண்டு நிறுவனங்கள் மூலம் சில்ரன் பிலீவ் தொழில் நுட்ப உதவியுடன் செயல்படுத்தி வருகிறது. அதன்படி திருவள்ளூரில் நடைபெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் இந்தியாவிற்கான கனடா நாட்டின் ஹை கமிஷனர் கேம்ரோன் மேக்கே கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
இவர் பேசுகையில் கனடா மற்றும் இந்தியா நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும், அரசாங்கமும் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான ஒத்துழைப்புகளிலிலும் செயல்பாடுகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக குறிப்பிட்டார்.இந்த செயல்பாடுகளில் கனடா நாட்டின் இளைஞர்களின் பங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். இங்குள்ள இளைஞர்களின் தலைமைத்துவத்தையும் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகளையும் பாராட்டி ஊக்குவித்தார்.
இவருடன் இந்தியாவிற்கான கனடா நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் பொது விவகாரங்களுக்கான கவுன்சிலர் மேத்யூ லோகன், கனடாவிற்கான தமிழ்நாடு வர்த்தக கமிஷ்னர் சுபா சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக சில்ரன் பிலீவ் இந்திய இயக்குநர் நான்சி அனபெல் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சில்ரன் பிலீவ் சர்வதேச முதன்மை திட்ட அலுவலர் டாக்டர். பெலின்டா பென்னட் , சில்ரன் பிலீவ் பார்ட்னர் தொண்டு நிறுவனங்களான ஸ்பீச், ஐ.ஆர்.சி.டி.எஸ், ரோப்ஸ், தொண்டுநிறுவன இயக்குனர்கள் செல்வம், ஸ்டீபன்,தனசேகரன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.