திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்த தினம், ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

பதிவு:2022-07-24 18:35:53

திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ நிகேதன் பள்ளி சமூக நலத் துறையும் திருவள்ளூர் ரோட்டரி கிளப்பும் இணைந்து பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை முன்னிட்டும், ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.

பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்ய ஒரு அரிய வாய்ப்பாக இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது. ஸ்ரீ நிகேதன் பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி இரத்த தானம் செய்து இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.பள்ளி இயக்குநர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் விஷ்ணுசரண் கலந்து கொண்டு இரத்த தான முகாமை பற்றி சிறப்புரையாற்றினார்.

இந்த இரத்த தான முகாமில் திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் தலைமை மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர்களும், அவர்களது குழுவினரும் சிறப்பான முறையில் இரத்த தான முகாமை நடத்த உதவியாக இருந்தனர். இம்முகாமில் ஸ்ரீ நிகேதன் பள்ளிகளைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், 40 ஆசிரியர்களும், 25 அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

அப்பொழுது மாணவர்களின் இந்த அரிய செயலை அறிந்த பெற்றோர்களும், பொதுமக்களும் நாளைய சமுதாயம் சிறப்புற்றிருக்கும் என்பதற்கு இம் மாணவர்களே சான்று என்று வாழ்த்தினர். இந்த இரத்த தான முகாம் இனிவரும் காலங்களிலும் ஆண்டுதோறும் காமராஜரின் பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக சீரும் சிறப்புமாக நடைபெறும் என்பதை பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் எடுத்துரைத்தார்.