நமது கோட்டை செய்தி நிறுவனத்தின் முப்பெரும் விழா.

பதிவு:2022-03-26 09:56:06



திருவள்ளூர் மாவட்டத்தில் நமது கோட்டை செய்தி நிறுவனத்தின் சார்பாக நமது கோட்டை அலுவலகம் திறப்பு விழா, நிருபர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நமது கோட்டை செய்தி நிறுவனத்தின்  முப்பெரும் விழா.

திருவள்ளூர் மாவட்டத்தில் நமது கோட்டை செய்தி நிறுவனத்தின் சார்பாக நமது கோட்டை அலுவலகம் திறப்பு விழா, நிருபர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. எம் மரிய ஜோசப், சுரேஷ் எஸ் குலசேகரன், எஸ்.பி.சதீஷ்குமார் எம்.பெருமாள் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் மேலும் திருவள்ளூர் மாவட்ட நிருபர்கள் கே.ராஜேஷ், எம்.ராகவன், பி.கோபிநாத், டீ.கமலேஷ், எஸ்.சிவசுப்பிரமணியன், எஸ். ஸ்ரீராமுலு, என்.மணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைமை நிருபர் ஜே.கஜவீரபாண்டியன் விழாவிற்கு தலைமை தாங்கினார். விழாவினை திருமதி சுகுணா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதய மலர் போன் பாண்டியன், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலன் ஜெயபாலன், உறுதிமொழி ஆணையர் டாக்டர் வி இ ஜான், மனித உரிமை ஆணையர் டி.குமரன் கிறிஸ்ட், திருவலங்காடு ஒன்றியக்குழு தலைவர் அகஸ்டின் குமார், சமூக புலனாய்வு மாத இதழின் ஆசிரியர் தமிழழகன், வழக்கறிஞர் கோல்ட் கோபால், வழக்கறிஞர் கரண்ட் கார்த்திக், 20-வது வார்டு கவுன்சிலர் இரா.விஜயகுமார், ஜி.பாலமுருகன், சமூக ஆர்வலர் முருகன், டாக்டர் சார்லஸ் ராணுவ வீரர் அலெக்ஸாண்டர்,

சமூக ஆர்வலர் ஜி.ராமகிருஷ்ணன், இருளர் மக்கள் சங்க தலைவர் இரா.பிரபு, டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். வெளியீட்டாளர் பா சதீஷ்குமார், ஆசிரியர் மணிகண்டன், இணையாசிரியர் நீ அன்பு பிரகாஷ், துணையாசிரியர் கோ முரளி கவி ஆகியோர் அனைத்து நிருபர்களுக்கும் அடையாள அட்டையை வழங்கினார்.

தலைமை நிருபர்கள் டாக்டர் வி அலெக்ஸ் ஜி சரவணன் பி கண்ணன் வி சுரேஷ் சென்னை நிருபர்கள் வி லீயோ ஏ பாலச்சந்திரன் மற்றும் அனைத்து பகுதி நிருபர்களும் உடனிருந்தனர் விழா இறுதியில் நிருபர் அகமது பாஷா நன்றி கூறினார்.