திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டார்

பதிவு:2022-07-24 18:51:15

திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெறுவதை தொடர்ந்து, தணிகேசன் திருமண மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவினை முன்னிட்டு திரை இசையில் பாரதி என்ற மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுவதை தொடர்ந்து, திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் நேரலையில் ஒளிப்பரப்பப்படுவதை பால்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேரடியாக பார்வையிட்டார்.பின்னர் சரவண பொய்கையில் தெப்ப திருவிழாவை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

இதில் திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத்,முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜே.அஸ்வத் பேகம், அறநிலையத்துறை கூடுதல் இயக்குநர் திருமகள், துணை ஆணையர் செயல் அலுவலர் விஜயா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு மற்றும் அரசு அலுலர்கள் கலந்து கொண்டனர்.