குரூப் 4 தேர்வில் 1 நிமிடம் தாமதமாக வந்தவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு

பதிவு:2022-07-24 18:49:05



குரூப் 4 தேர்வில் 1 நிமிடம் தாமதமாக வந்தவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு : அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தும் அனுமதிக்காததால் தேர்வர்கள் அவதி

குரூப் 4 தேர்வில் 1 நிமிடம்  தாமதமாக வந்தவர்கள் உட்பட 200-க்கும்  மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு

திருவள்ளூர் ஜூலை 24 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 195 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 60,305 தேர்வர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுரையின்படி தேர்வு அறைக்குள் அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 9 மணிக்குள் தவறாமல் தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்திடவும் அதற்கு மேல் வருகை புரியும் தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா என்பதால் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், போதிய பேருந்து வசதி இல்லாததாலும், ஒரு சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பதாலும் தேர்வுமையத்திற்கு நிர்ணயித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருத்தணி தாலுக்காவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 9 மணிக்கு பிறகு 9.01 மணிக்கு தேர்வு எழுத சென்றவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை தேர்வு எழுத அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

அதனால் தேர்வர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் செய்தும் தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் வீட்டிற்கு சென்றனர்.அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தும் அனுமதிக்காததால் தேர்வர்கள் அவதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது.இந்நிலையில் திருவள்ளூர் தாலுக்காவிற்குட்பட்ட பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு மையங்களில் ஒரு நிமிடம் காலதாமதாக வந்தவர்கள் முதல் அரை மணி நேரம் தாமதமாக வந்தவர்கள் வரை ஒருவரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் வீட்டிற்கு சென்றனர்.