திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

பதிவு:2022-07-24 18:52:44

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இந்த கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று முதல் நாள் தெப்ப திருவிழாவை முன்னிட்டு மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று சரவணப்பொய்கையில் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதல் நாள் தெப்பல் மூன்று முறை சரவணப் பொய்கை குளத்தை சுற்றி வந்தது அப்போது பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மற்றும் மெல்லிசை குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெற்றது.

இந்த தெப்பத் திருவிழாவை பக்தர்கள் குளத்தின் நான்கு பக்கப் படிகளிலும் அமர்ந்து அரோகரா அரோகரா என்று பக்தி முழங்க விண்ணைப் பிளக்க கோஷம் எழுப்பி, தெப்பம் வரும்போது கற்பூரம் ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் விஜயா ஆகியோர் செய்திருந்தார்.