திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் பிளஸ் டூ மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை: மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக எம்.எல்.ஏ.வின் உத்தரவாதத்தை தொடர்ந்து உடலை பெற்று சென்றனர்

பதிவு:2022-07-26 14:14:35

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் பிளஸ்2 மாணவி சரளா பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவி சரளாவின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன் தலைமையில் மாணவி சரளாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனால் மருத்துவமனை வளாகம் அருகே அசம்பாவிதங்களை தவிர்க்க 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆயுதப்படை ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி சத்யபிரியா, எஸ் பி பெகர்லா செபாஸ் கல்யாண் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மருத்துவமனை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரசி ஸ்ரீ வத்சன் தலைமையில் மருத்துவர்கள் நாராயண பிரபு, பிரபு, வைர மாலா ஆகிய மருத்துவர்கள் சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் முன்னிலையில் முழு வீடியோ பதிவு காட்சிகளுடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் பிரேதப்‌ பரிசோதனையின் போது உறவினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் பிரேதப் பரிசோதனை செய்வதால் உடலை வாங்க போவதில்லை என்றும், முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்த நிர்வாகம் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனே வாங்க போவதில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு அரசு வேலை. மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் எம்எல்ஏ வி ஜி ராஜேந்திரன் மாணவியின் உறவினர்களுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளித்ததையடுத்து மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறந்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கொண்டு செல்லப்பட்டது