திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-07-26 15:17:41



திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஜூலை 26 : கழக பொதுச் செயலாளர் தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் ஆணைக்கிணங்க, வரலாறு காணாத அளவில் மக்களை வாட்டி வதைத்து வஞ்சிக்கும் வகையில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சட்டமன்ற பொது தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது, மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளான அரிசி பருப்பு சமையல் எண்ணெய் காய்கறிகள் போன்றவற்றின் இமாலய விலை உயர்வுகளால் பரிதவிக்கும் அப்பாவி மக்களை இந்த கொடுங்கோல் ஆட்சியின் கொடூர கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில், மக்கள் விரோத செயல்களை முன்னெடுக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி டாக்டர் பி வேணுகோபால், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.ஹரி, துணை செயலாளர் கமேண்டோ பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் சூரதாபுரம் சுதாகர், மாதவன், சக்திவேல்,ஆர்.கே.பேட்டை குமார், திருத்தணி நகர செயலாளர் சௌந்தர்ராஜன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் வி. ஆர் ராம்குமார், சௌந்தர்ராஜன், வழக்கறிஞர் கடம்பத்தூர் ஜெய்சங்கர், வேல் முருகன் எழிலரசன் ஜோதி தியாகு, ஜெயா நகர் குமரேசன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இதயம் செய்யாமல் மக்களை ஏமாற்றியதாகவும், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியதற்கு கண்டனத்தையும் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான‌பிவி ரமணா பேசும்போது குற்றம் சாட்டினார்