எருமைவெட்டிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் அதை வீடியோ எடுத்த நண்பர்களுக்கு பகிர்ந்த 5 இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

பதிவு:2022-07-28 09:28:07



எருமைவெட்டிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் அதை வீடியோ எடுத்த நண்பர்களுக்கு பகிர்ந்த 5 இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

எருமைவெட்டிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் அதை வீடியோ எடுத்த நண்பர்களுக்கு பகிர்ந்த 5 இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

திருவள்ளூர் ஜூலை 27 : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒழிந்தியபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கம்சலா இவர் கடந்த 8 ஆண்டுகளாக தனது கணவருடன் தங்கி புதிய எருமைவெட்டிபாளையத்தில் வினோத் சேம்பருக்கு சொந்தமான இடத்தில் தங்கி கொண்டு விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். இவரது தம்பி ரவி , ரவியின் மனைவி பெயர் லட்சுமி. இவர்களுக்கு தற்போது 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தை 2 வயது இருக்கும் போது கம்சலாவின் தம்பி மனைவி லட்சுமி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடத்த 5 வருடத்திற்கு முன்பு தம்பி ரவியும் இறந்துவிட்டார். இதனால் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் கம்சலா அழைத்து வந்து வளர்த்து வந்துள்ளார். அந்த குழந்தை எருமைவெட்டியபாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 24.07.2022 -ம் தேதி அந்த 8 வயது குழந்தை பாம்பு கடித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த 8 வயது குழந்தையை கடந்த 4 மாதத்திற்கு முன்பு எருமைவெட்டிய பாளையத்தை சேர்ந்த பாலு என்பவர் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை எருமைவெட்டியப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதனின் மகன் கண்ணன் (30) என்பவர் அவருடை செல்போனில் படம் பிடித்து வீடியோக்களை அவரது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் . மேற்படி வீடியோ காட்சிகள் பற்றி விவரங்கள் கம்சலாவுக்கு 25.07.2022-ம் தேதி தெரியவந்தது .இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சலா சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் நிலையத்தில் கம்சலா கொடுத்த புகாரின் பேரில் எருமை வெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் பாலு, லோகநாதனின் மகன் கண்ணன், மற்றும் அதே பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சதீஷ்,மணி என்பவரது மகன் விஜயகுமார்,வெங்கடேசன் மகன் ரமேஷ், முரளி மகன் பாஸ்கர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை என்பதால் இந்த வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்திரா தேவி வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதனையடுத்து முதியவர் உள்ளிட்ட 6 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரிடம் இளைஞர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்ததால் அது குறித்தும் விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.