திருத்தணியில் விவசாய கிணற்றில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவன் சடலம் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

பதிவு:2022-07-28 09:32:00



திருத்தணியில் விவசாய கிணற்றில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவன் சடலம் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

திருத்தணியில் விவசாய கிணற்றில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவன் சடலம் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

திருவள்ளூர் ஜூலை 27 : திருத்தணி நகராட்சியில் ஏரிக்கரை தெருவில் பாழடைந்த விவசாய கிணற்றில் பள்ளி மாணவன் சடலம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் கொட்டும் மழையில் விவசாய கிணற்றில் இருந்த மாணவன் சடலத்தை மூன்று மணி நேரம் போராடி வெளியே எடுத்தனர்,

அந்த உடலை திருத்தணி போலீசாரிடம் தீயணைப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர், போலீசார் மாணவன் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், இறந்து போன சூரிய பிரகாஷ் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் விவசாய கிணற்றில் மாணவர்களுடன் குளிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது இவருடன் குளித்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எதற்காக மாணவர்கள் தப்பி சென்றனர்.

மேலும் இறந்து போன சூரிய பிரகாஷ் மாணவன் திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் மாணவன்‌ குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த மாணவன் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் மாணவன் மரணத்தில் சந்தேகங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று திருத்தணி போலீசார் தெரிவித்துள்ளனர்.