பதிவு:2022-07-28 09:36:58
பூந்தமல்லி அருகே சாலையை கடந்த வேன் மீது தனியார் பஸ் மோதல் : 10 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்
திருவள்ளூர் ஜூலை 27 : காஞ்சிபுரத்திலிருந்து செங்குன்றம் செல்லும் தனியார் பஸ் இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் உள்ள சிப்காட்டிற்கு செல்ல சாலை கடந்த லோடு வேன் மீது கட்டுப்பாட்டை இழந்த பஸ் வேகமாக மோதியதில் லோடு வேனை சிறிது தூரம் இழுத்து சென்று அங்கு இருந்த உயிர் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.
இதில் உயர் கோபுர மின் கம்பம் சாய்ந்து மினி லோடு வேணும் நொறுங்கியது இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சாலையை கடந்த வேன் மீது பஸ் மோதியதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது இதையடுத்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.பின்னர் மற்ற பயணிகள் வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.