மாதர்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : 1,120 பயனாளிகளுக்கு ரூ. 13.49 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

பதிவு:2022-07-28 13:37:31



மாதர்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : 1,120 பயனாளிகளுக்கு ரூ. 13.49 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

மாதர்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : 1,120 பயனாளிகளுக்கு ரூ. 13.49 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர் ஜூலை 28 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், மாதர்பாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண் - உழவர் நலத்துறை, கால்நடைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பாக முதியோர் உதவித் தொகை 51 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் 27 பயனாளிகளுக்கும், கணவனால் கைவிடப்பட்டோர் தொடர்பாக 2 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விதவைகள் ஒய்வூதிய திட்டம் தொடர்பாக 44 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை 8 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித்தொகை 34 பயனாளிகளுக்கும், கல்வி; உதவி;தொகை 3 பயனாளிகளுக்கும், குடும்ப அட்டை தொடர்பாக 133 பயனாளிகளுக்கும், முழுபுலம் பட்டா தொடர்பாக 13 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா தொடர்பாக 8 பயனாளிகளுக்கும், கிராம நத்தம் பட்டா தொடர்பாக 4 பயனாளிகளுக்கும், கிராம நத்தம் நகல் பட்டா 61 பயனாளிகளுக்கும், வாக்காளர் அட்டை 51 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 18 நபர்களுக்கு வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்டங்கள் 6 நபர்களுக்கும், இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டிகள் 7 நபர்களுக்கும், 100 சதவிகிதம் மானியத்தில் ஊரக ஏழை விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற ஏழை பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 61 நபர்களுக்கு வெள்ளாடுகளும், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை 66 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சார்பில் 15 நபர்களுக்கு இடுபொருட்களும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்pதின் கீழ் 501 நபர்களுக்கு அடையாள அட்டைகளும், மீன்வளம் மற்றும் மீன்கள் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு நலத்திட்டங்களும், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு துறைகள் சார்பாக 1,120 பயனாளிகளுக்கு ரூ. 13,49,620 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழு) லிமிடெட், காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் புதிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள பேருந்துகளை பால்வளத்துறை அமைச்சர் கொடியசைத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு.ராஜேந்திரன், போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல துணை மேலாளர் (வணிகம்) ஸ்ரீதர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் க.காயத்திரி, திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கே.ஆர். ஜவஹர்லால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.