திருவள்ளூரில் மின்கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-07-28 13:39:50



திருவள்ளூரில் மின்கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் மின்கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஜூலை 28 : திருவள்ளூரில் மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்தும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆட்டந்தாங்கல் கே.எம்.டில்லி ஆவடி மாநகர செயலாளர் நா.மு.சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இளைஞரணி செயலாளருமான கு.நல்லதம்பி, மகளிரணி துணை செயலாளர் சுபமங்களம் டில்லிபாபு தொண்டரணி துணை செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆயில் கே.சரவணன், துணை செயலாளர் கே.ஆர். கிரிபாபு நகர செயலாளர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர். அரசு உயர்த்திய சொத்து வரி மின்சார கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தியும் மாதாந்திர மின்கணக்கீட்டு அளவை நடைமுறைப்படுத்த வேண்டும், சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும் எனபதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதே போல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் பெட்ரோல் சமையல் கேஸ் மீதான தொடர் விலை உயர்வை கட்டுப்படுத்தி நடைமுறையில் உள்ள விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரஜினிகாந்த், புஜ்ஜி முரளிகிருஷ்ணன், பிரபாவதி பாலாதி, முனிவேல், கீழானூர் எஸ்.சுந்தர்,கணேசன் வேப்பம்பட்டு பிரேம் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.