காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம்

பதிவு:2022-07-28 13:45:51

திருவள்ளூர் ஜூலை 28 : மத்திய அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பொய் வழக்கை போட்டு அலைக்கழிப்பதைக் கண்டித்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதியான அறவழிப் போராட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ஏ ஜி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகர காங்கிரஸ் தலைவரும், திருவள்ளூர் நகர் மன்ற உறுப்பினருமான வி.இ.ஜான் வரவேற்றார். அப்போது, காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்களுக்காக பல தியாகங்களை செய்துள்ள கட்சியாகும். ஆனால் பாஜகவில் தியாகத் தலைவர் என்று சொல்ல ஒருவர் கூட தகுதி இல்லாத நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார். கடந்த எட்டு ஆண்டுகளில் மோடி அரசு மக்களுக்கு எதிரான பல்வேறு புதிய சட்டங்களை இயற்றி சர்வாதிகார முறையில் ஆட்சியை நடத்தி வருகிறது வரலாற்றில் சர்வாதிகாரம் செய்தவர்கள் எல்லாம் எப்படி அழிந்தார்கள் என்பதை நாடியறியும். அதுபோல் ஒரு நாள் மக்கள் எழுச்சி வந்து இந்த ஆட்சிக்கு முடிவு வரும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் ஆர்.சசிக்குமார், ஜே.டி அருள்மொழி, கோவிந்தராஜ், டி.வடிவேலு, ஏ.திவாகர், தளபதி மூர்த்தி, எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்ட பலர் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.