மாநில நிதிக்குழு மானியத் தொகை 3 மாதங்களுக்கு 3 கோடியே 97 லட்சத்து 71 ஆயிரத்து 615 ரூபாய் பெறப்பட்டது

பதிவு:2022-07-28 13:48:33



மாநில நிதிக்குழு மானியத் தொகை 3 மாதங்களுக்கு 3 கோடியே 97 லட்சத்து 71 ஆயிரத்து 615 ரூபாய் பெறப்பட்டது : மாவட்ட ஊராட்சி பொது நிதியாக வங்கி கணக்கில் வரவு : மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் தகவல்

மாநில நிதிக்குழு மானியத் தொகை  3 மாதங்களுக்கு 3 கோடியே 97 லட்சத்து 71 ஆயிரத்து 615 ரூபாய் பெறப்பட்டது

திருவள்ளூர் ஜூலை 28 : திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் அவசரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி தலைமையில் துணைத் தலைவர் டி.தேசிங்கு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு மாநில நிதிக்குழு மானியத் தொகை ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2022 ஆகிய 3 மாதங்களுக்கு 3 கோடியே 97 லட்சத்து 71 ஆயிரத்து 615 ரூபாய் பெறப்பட்டு அந்த தொகை மாவட்ட ஊராட்சி பொது நிதி இந்தியன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட விவரம் இந்த மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதே போல் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 22 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அவரவர் பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய மன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்களுக்கு பயணப்படி வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு மாவட்ட வார்டு உறுப்பினர்கள் தங்களது நன்றியனை தெரிவித்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர்கள் இந்திரா பொன்குணசேகர் ஏ.ஜி.ரவி, விஜயகுமாரி சரவணன், மு.சாரதம்மா, எஸ்.ராமஜெயம், எம்.சித்ரா, டி.தேசராணி, கிதா, டி.தென்னவன், கே.யு.சிவசங்கரி, சரஸ்வதி சந்திரசேகர், மோரை மு.சதிஷ்குமார், சு.சக்திவேல், சுதாகர். இ.தினேஷ்குமார், த.தேவி, அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள், கோ.குமார், பாண்டுரங்கம். அம்முனி மகேந்திரன். சாந்தி பிரியா. ஹேமாவதி.மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.