பதிவு:2022-07-31 15:36:08
திருவள்ளூர் அருகே உதவி பாஸ்போர்ட் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை :
திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் பட்டேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி கிரிஜா (60). கிரிஜா உதவி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் வீட்டின் பின்புறம் உள்ள மகளின் வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் எழுந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவின் பூட்டை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த குழந்தைகள் மோதிரம் செயின் என மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ஒரு லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து கிரிஜா திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.