பதிவு:2022-07-31 15:21:46
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி : மாணவ-மாணிவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு :
திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடயே பேச்சுப் போட்டி நேற்று திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து 23 மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
திருவள்ளுர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசினார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து 23 மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டனர். இப்பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரத்தை ஆவடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆஷிகா பிர்தவ்ஸ், -ம், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3000-ஐ திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பூ.இவாஞ்சிலினும், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2000-ஐ சோழவரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த வி.சாருமதியும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், அரசுப் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2 ஆயிரத்தை பெற அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த .மு.பிரவீனா, குருவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த வி.பிரவீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் கலெக்டர் பின்னர் வழங்குவார் என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி சீ.சந்தானலட்சுமி தெரிவித்தார்.