பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு :

பதிவு:2022-07-31 15:40:15



பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு :

பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு :

திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பூண்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் சிறு சிறு நோய்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்கள் மாதாந்திர பரிசோதனை செய்யவும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.மருத்துவர்களின் சிகிச்சை முறை குறித்தும், மருத்துவ வசதி குறித்தும் நோயாளிகள் மற்றும் பொது மக்களிடம் குறைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

அதே நேரத்தில் பிரசவத்திற்காக வந்தவர்களிடம் பரிசோதனைகள் செய்வது குறித்தும், மருந்து, மாத்திரைகள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவேண்டியவற்றை வைத்து பராமரிப்பு செய்கின்றனரா என்றும் ஆய்வு செய்தார். படுக்கை வசதி குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து முருங்கைப் பூ கசாயத்தை பொது மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு கொடுத்ததோடு அதனை தானும் குடித்து, அதன் நன்மைகள் குறித்தும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எடுத்துரைத்தார். தினமும் முருங்கை பூ கஷாயத்தை காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும் என்றும், வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும் , முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, சுகாதார துறை துணை இயக்குனர் ஜவஹர், மருத்துவர்கள் பால மணிகண்டன், வினோத்குமார் மற்றும் பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.