பதிவு:2022-07-31 15:49:00
திருவள்ளூர் மாவட்ட பாமக சார்பில் கஞ்சா,குட்கா,அபின் போன்ற போதை பொருட்களை தடைசெய்ய கோரி ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜூலை 31 : திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கஞ்சா,குட்கா,அபின் போன்ற போதை பொருட்களை முற்றிலுமாக தடைசெய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் இ.தினேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலா என்கிற பாலயோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கஞ்சா, குட்கா, அபீன் போன்ற போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை உருவாகிறது என்றும் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் இந்த கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதால் வருங்கால தமிழகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாநிலமாக உருவாகும் என்றும் தெரிவித்தார்.இதனையடுத்து தமிழகம் முழுவதும் உடனடியாக கஞ்சா,குட்கா,அபின் போன்ற போதை பொருட்களை முற்றிலுமாக தடைசெய்ய கோரி கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ,மாவட்ட தலைவர் விஜயன்,ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடேசன், யோகானந்தம், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ். ஏழுமலை, கேசவன், விஜயராகவன், நகர நிர்வாகிகள் கண்ணன், குமார், ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.