அரக்கோணம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி : விடியா திமுக அரசு மாணவர்களின் தற்கொலைக்கான காரணத்தை ஆராயாமல் இருப்பதாக அதிமுக துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ., குற்றம் சாட்டினார்.

பதிவு:2022-07-31 15:53:24

திருவள்ளூர் ஜூலை 31 : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் சந்தோஷ் (13) என்ற மாணவன் தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் சந்தோஷ் மாலை வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் மாணவன் சந்தோஷை மீட்டு உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மாணவன் சந்தோஷூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரக்கோணம் எம்.எல்.ஏ.வும், அரசு துணை கொறடாவுமான ரவி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சைப் பெற்று வரும் மாணவன் சந்தோஷின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரக்கோணம் எம்.எல்.ஏ., ரவி, கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலை, அதனைத் தொடர்ந்து கீழச்சேரியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்கின்றன.

ஆனால் இந்த விடியா திமுக அரசு தற்கொலைக்கான காரணத்தை ஆராயவில்லை என்றும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சாரக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலினின் சினிமா படங்களையும், ரசிகர் மன்றங்களையும் மேற்பார்வையிடுவதிலேயே கவனம் செலுத்தவதாகவும், பள்ளிக் கல்வித்துறையை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த விடியா திமுக ஆட்சியில் மாணவ மாணவிகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறைக்காக இந்த அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மாணவன் தற்கொலைக்கு முயன்றதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ, அந்த மாவட்ட அமைச்சர் காந்தியோ நேரில் வந்து பார்த்து ஆறுதல் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். இந்த அரசு மாணவனைப் பற்றி கவலைப்படவில்லை. இதை தான் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் மாணவர்கள் தற்கொலை நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ.,தெரிவித்தார். அவருடன் திருவள்ளூர் நகர கழக செயலாளர் கந்தசாமி, அதிமுக நிர்வாகிகள், ஜோதி, தியாகு உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.