திருவள்ளூர் நகராட்சியில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட கழிவுநீரை கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டியதால் 4 லாரிகள் பறிமுதல் : தலா 10 ஆயிரம் அபராதம் : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

பதிவு:2022-08-03 15:19:37

திருவள்ளூர் ஆக 03 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், ஹோட்டல், மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கொண்டு வரப்படும் கழிவு நீரை கூவம் ஆற்றங்கரையோம் கொட்டிவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நகராட்சி ஆணையருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுதர்சன் ஆகியோர் பெரியகுப்பத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் சோதனை செய்தனர்.

அப்போது, நகராட்சி விதிமுறைகளை மீறி 4 லாரிகளில் கொண்டு வரப்பட்ட கழிவு நீரை கூவம் ஆற்றங்கரையோரம் கொட்டியது தெரியவந்தது. இது குறித்து நகர்மன்றத்துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட மவுலானா, ஜெயச்சந்திரன், பாண்டியன் மற்றும் சரஸ்வதி ஆகிய 4 லாரிகள் பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

இனி வரும் காலங்களில் மீண்டும் கழிவு நீரை கூவம் ஆற்றங்கரையோரம் கொட்டினால் அபராதத் தொகை ரூ.50 ஆயிரமாக வசூலிக்கப்படும், பறிமுதல் செய்யப்படும் லாரி திருப்பித் தரப்படமாட்டாது எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.