பதிவு:2022-08-03 15:22:29
திருவள்ளூர் அடுத்த திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு
திருவள்ளூர் ஆக 04 : திருவள்ளூர் அடுத்த திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தாய்ப்பால் வாரம் மற்றும் 75 வது சுதந்திர பொன்விழா ஆண்டை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம்,பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்த பயிற்சி அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது.
வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பெ.சாந்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தாய்ப்பாலின் பங்கு குறித்தும்,தாய்ப்பால் புகட்டுவதின் அவசியத்தையும் வலிறுத்தினார்.
மேலும், பாலூட்டும் தாய்மார்கள், ஏன் சரியான சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும் என்றும்,தாய் மற்றும் குழந்தையின் சினைப்பை பலப்படுத்த தாய்ப்பால் உதவுவது குறித்தும் எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில் 39 அங்கன்வாடி பெண் ஊழியர்கள் கலந்து கலந்து கொண்டனர்.