பதிவு:2022-08-03 15:39:45
திருவாலங்காடு பத்ரகாளியம்மனுக்கு பால்குடம் எடுத்து பெண்கள் பூஜை :
திருவள்ளூர் ஆக 04 : திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத மூன்றாம் செவ்வாய்கிழமை அன்று பத்ரகாளியம்மனுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வழிப்படுவது வழக்கம். இதனையடுத்து பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருவாலங்காடு சன்னதி தெரு, பெரிய தெரு, தெற்கு மாட வீதி, பாஞ்சாலி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சன்னதி தெருவில் இருந்து பத்ர காளியம்மன் கோவில் நோக்கி பால்குடம் எடுத்து சென்றனர். பின்னர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.