பதிவு:2022-08-08 20:11:44
திருவள்ளூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்தவர் கைது :
திருவள்ளூர் ஆக 06 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏகாட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்ட் மகேந்திரன் ஏகாட்டூர், அன்னை இந்திரா நகரில் சோதனை மேற்கொண்டார்.
அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவனை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவன் ஏகாட்டூர் கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன் தியாகி என்கிற தியாகராஜன் (30) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த தியாகராஜனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.