பதிவு:2022-08-08 20:32:10
திருவள்ளூரில் பார்வையற்ற 48 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மானியமாக ரூ.1 கோடியே 80 ஆயிரம் மதிப்பீட்டில் சுயமாக வீடு கட்டுவதற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பார்வையற்ற 48 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2.10 இலட்சம் வீதம் அரசு மானியமாக ரூபாய் ஒரு கோடியே 80 ஆயிரம் மதிப்பீட்டில் சுயமாக வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பார்வையற்றோர்கள் 57 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊத்துக்கோட்டை வட்டம், கச்சூர் கிராம புல எண்.375/1-ல் இலவச வீட்டுமனைப பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 57 பயனாளிகளில் 48 தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் வழியாக அரசு மானியம் பெற்று சுயமாக வீடு கட்டுதலுக்கான ஆணை மாவட்ட ஆட்சியரால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் பயனாளி ஒருவர் ரூ.2,10,000 அரசு மூலம் நிதி உதவி பெறுவார். இந்த ஆணை வழங்கப்பட்ட 48 நபர்களுக்கு ரூ.1,00,80,000 செலவினம் அரசு ஏற்கும்.இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர் ப.செந்தாமரைக் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.