பதிவு:2022-08-08 20:38:08
திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் மற்றும் இரண்டாம் நிலை சிறைக்காவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஆக 07 : தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் ஆண்,பெண் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்பு வருகின்ற 10.08.2022 அன்று காலை 10.30 மணிக்கு அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது.
மேற்காணும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ அல்லது 9499055893,044-27660250 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.