ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராணிப்பேட்டைஅருகே வாலிபர் வெட்டிக்கொலை : முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் :

பதிவு:2022-08-08 20:46:02



ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராணிப்பேட்டைஅருகே வாலிபர் வெட்டிக்கொலை : முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் :

ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராணிப்பேட்டைஅருகே வாலிபர்  வெட்டிக்கொலை : முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண்  :

ராணிப்பேட்டை ஆக 07 : ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராம்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி இவர் அப்பகுதியில் உள்ள விளாரி ஏரியில் மீன்பிடிப்பதற்கான குத்திகையை எடுத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த தினகரன்(42) இவரது மகன் அசோக் (21)ஆகியோர் மீன் பிடிப்பதற்கு சுப்பிரமணியுடன் உதவியாக இருந்து வருகின்றனர்

இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த கலையரசன்(21) இரவு நேரங்களில் விளாரி ஏரியில் குத்தகைக்காரர்களுக்கு தெரியாமல் மீன் பிடித்து வந்துள்ளார். இது தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக தினகரன், அசோக் மற்றும் கலையரசன் ஆகியோருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திமிரி காவல் நிலையத்தில் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு உள்ள நிலையில் மீண்டும் கலையரசன் நேற்றுமுன்தினம் இரவு ஏரியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது

இதன் காரணமாக நேற்று காலை தினகரன் மற்றும் கலையரசுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது கலையரசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு தினகரனை வெட்ட முயற்சித்துள்ளார். அப்பொழுது குறுக்கிட்ட தினகரனின் மகன் அசோக் அந்த கத்தியை பிடுங்கி கலையரசை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக நிலைகுலைந்த கலையரசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலையரசன் மருத்துவமனையில் உயிர் இழந்தார்

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த திமிரி போலீசார் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தினகரன் மற்றும் அசோக் ஆகியோரை தேடி வந்தனர். மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் திமிரி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சீனிவாசன்என்ற 62 வயது முதியவர், தினேஷ் (25) ஆகிய இருவர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் மத்திய சிறைக்குகொண்டு செல்லப்பட்டனர்.