ஆர். கே. பேட்டை ஒன்றிய குழு தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த பெண் தலைவர் திமுகவில் இணைந்தத ஒன்றிய குழு தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கண்களுக்கு கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன போராட்டம் :

பதிவு:2022-08-08 21:13:10

திருவள்ளூர் ஆக 07 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ரஞ்சிதா ஆபாவாணன் செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், இன்று ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் பி.டி.சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.

மன்றத்தில் ஒன்றிய குழுத்தலைவர் பேச தொடங்கியதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து துரோகி என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டு மன்றத்திலிருந்து வெளியேறினர். அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துரோகம் செய்து திமுகவுக்கு தாவிய ஒன்றிய குழு தலைவர் ஒழிக என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆர்.கே. பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற மன்ற கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.