திருவள்ளூரில் உள்ள ஸ்ரீபஞ்சபாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா :

பதிவு:2022-08-09 01:44:45



திருவள்ளூரில் உள்ள ஸ்ரீபஞ்சபாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா :

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீபஞ்சபாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா :

திருவள்ளூர் ஆக 08 : திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு அக்னி வசந்த விழா ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், வீதி உலா, மகாபாரத சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து ஆடி மாதம் 4-வது ஞாயிற்றுக்கிழமை துரியன் படுகளமும் இதை தோடர்ந்து விழாவின் நிறைவு நாளில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். வேண்டிய வரத்தை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த இந்த திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.