ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத்தில் தமிழ்த் துறை சார்பில் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 11-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளின் பரிசு வழங்கும் விழா :

பதிவு:2022-08-09 01:51:26



ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத்தில் தமிழ்த் துறை சார்பில் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 11-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளின் பரிசு வழங்கும் விழா :

ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத்தில் தமிழ்த் துறை சார்பில் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 11-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளின் பரிசு வழங்கும் விழா :

திருவள்ளூர் ஆக 08 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத்தில் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 11-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.பள்ளி தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்த்தார். பள்ளி தமிழாசிரியர் பிளஸன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் நடுவர், தொலைக்காட்சி நாடக ஆசிரியர் ஜோ. அருள்பிரகாஷ் கலந்து கொண்டு, சென்னை, பூந்தமல்லி பொன்னேரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களில் 73 பள்ளிகளில் இருந்து வந்து வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவிகளுக்கு 2 இலட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையினையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் புத்தகங்களையும் வழங்கி உரையாற்றும் பொழுது, சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கக் கூடிய ஆழ்ந்த கருத்துக்களை மாணவர் மத்தியில் எடுத்துரைத்தார்.

மாணவர்களுக்கு கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வழி காட்டினார். பெற்ற தாய்க்கும், தாய் மொழிக்கும், தாய் நாட்டுக்கும் மதிப்பளித்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். ஸ்ரீ நிகேதன் பள்ளியில் நடைபெறும் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் தமிழ் வளர்ச்சிப் போட்டிகளைப் போல, தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என தனது தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக மாநில அளவில் தமிழ் பாடத்தில் *100/100* மதிப்பெண் பெற்று திருவள்ளூர் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த தமிழ் மாணவி மு.கா.கீர்த்தனாவை வழிநடத்தி + 2 அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற பயிற்சி கொடுத்த *தமிழ் ஆசிரியர் தரணி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் டாக்டர் ஸ்டெல்லா ஜோசப்,தலைமை ஆசிரியர் பத்மாவதி, ஸ்ரீ நிகேதன் பள்ளியின் தமிழ் ஆசிரியர் பட்டிமன்றப் பேச்சாளர் எபினேசர் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளின் முதல்வர்களையும், ஆசிரியர்களையும்,மாணவச் செல்வங்களையும் வாழ்த்தினார்.இறுதியில் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசிரியை பவானி நன்றி கூறினார்.