திருவள்ளூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி : 35 ஆயிரம் தேசியக் கொடி விற்பனை இலக்கு நிர்ணயம் என கோட்ட கண்காணிப்பாளர் தகவல் :

பதிவு:2022-08-09 01:57:30

திருவள்ளூர் ஆக 08 : 75-வது சுதந்திர திரு நாள் அமுதப் பெருவிழா இந்திய நாடெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 13-ந் தேதியிலிருந்து 15 ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய மூவர்ண கொடியை அஞ்சல் துறையுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக இந்திய தேசிய கொடி இந்தியாவில் உள்ல அனைத்து தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்கள் மற்றும் கிராமிய கிளை அஞ்சலகங்களிலும் கிடைக்கும் படி அனைத்து ஏற்பாடுகளும் அஞ்சல் துறையின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட 329 அஞ்சலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்ட 20 இன்ச் அகலமும், 30 இஞ்ச் நீளமும் கொண்ட தேசிய கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை தொடங்கிய முதல் நாளில் இருந்தே பொது மக்கள் ஆர்வமுடின் தேசியக் கொடியை வாங்கிச் செல்கின்றனர்.

இல்லந்தோறும், மூவர்ணம் கொண்டாட்டத்திற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளர் பாபு பேரணியை தொடங்கி வைத்து தானும் பங்கேற்றார். இந்த பேரணியில் உதவி உட்கோட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, தலைமை தபால் அலுவலர் ரேவதி மற்றும் தபால் காரர்கள், தபால் அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் கோட்டத்தில் உள்ள 329 அஞ்சலகங்களிலும் இதுவரை 10 ஆயிரத்து 256 தேசியக் கொடி விற்பனை ஆகியிருப்பதாகவும், 35 ஆயிரம் தேசியக் கொடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், பொது மக்கள் அனைவரும் மூவர்ணம் என்ற கொண்டாட்டத்தை அஞ்சல்துறையினருடன் இணைந்துகொண்டாட கோட்ட கண்காணிப்பாளர் பாபு கேட்டுக் கொண்டார்.