ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளின் 40 பயனாளிகளுக்கு கிரைய பத்திரங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

பதிவு:2022-08-09 02:02:42



ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளின் 40 பயனாளிகளுக்கு கிரைய பத்திரங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளின் 40 பயனாளிகளுக்கு கிரைய பத்திரங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 08 : ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் உள்ள 40 பயனாளிகளுக்கு கிரயப் பத்திரங்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி பேசினார்.

மக்கள் தங்களுக்கு உள்ள குறைகளை புகார் பெட்டியில் மனுக்களாக அளித்தனர். அந்த புகார் பெட்டியில் உள்ள மனுக்களுக்கெல்லாம் சீராய்வு செய்வதற்கு தனி வாரியம் அமைத்து, அந்த மனுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து அவர்களின் தேவைகளை கண்டறிந்து. அவர்களின் தேவைக்கேற்ப இன்றைக்கு முதல்வர் நடைமுறைப்படுத்தி, செயலாற்றி வருகிறார்.

அந்த வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பகுதிகளான ஜெனரல் கரியப்பா நகர், ஆவடி சோழன் நகர், திருநின்றவூர் -1 - பெரியார் நகர், திருநின்றவூர் முத்தமிழ் நகர், ஆவடி செந்தமிழ் நகர் ஆகிய திட்டப் பகுதிகள் 1992 முதல் 1995 வரை துவக்கப்பட்டு அந்நாள் முதல் பயனாளிகள் மனையின் மாத கிரைய தொகையை கடந்த 20 ஆண்டுகளாக தவணையாக வாரியத்திற்கு செலுத்தி வந்துள்ளார்கள். தற்போது கிரையத்தொகை முழுவதும் செலுத்திய பயனாளிகளுக்கு மட்டும் முதல் கட்டமாக 40 நபர்களுக்கு கிரையப் பத்திரம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்திற்கான கட்டிடப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ்,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, ஆவடி மாநகராட்சி துணை மேயர் ச.சூரியகுமார், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் செந்தில் குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ப.செந்தாமரைக் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் ராஜேந்திரன், அமுதா பேபி சேகர், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பரமேஷ்வரி கந்தன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் குபேந்திரன், உதவி செயற்பொறியாளர் (மருத்துவப் பணிகள்) புஷ்பலிங்கம், இளநிலை பொறியாளர் ரஞ்சித் குமார், உதவி பொறியாளர் சதாசிவம், கருணாகரச்சேரி ஊராட்சித் தலைவர் பத்மாவதி கைலாசம், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.