ஆர்.கே.பேட்டையில் 26 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் முத்ரா கடன் பறுவதற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-08-09 02:07:22



ஆர்.கே.பேட்டையில் 26 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் முத்ரா கடன் பறுவதற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

ஆர்.கே.பேட்டையில் 26 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் முத்ரா கடன் பறுவதற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 08 : திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு 26 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் கைத்தறி துறை சார்பாக முத்ரா கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.

கைத்தறியை பொறுத்தவரை பொதுமக்களுடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய கைத்தறி தினம் கொண்டாடுதல் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளிச்சநதையிலும், கோஆப்டெக்ஸ் நிறுவனத்திலும் நம்முடைய கைத்தறி ஆடைகளை கொடுக்கும்படியாக நம் திறமைகளை மேம்படு;த்துவதற்கான துறை ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் உதவி இயக்குநர் மூலமாக எடுக்கப்படும். அதனடிப்படையில் அரசும் இங்கு ஒரு டெக்டைல் பார்க் கொண்டு வருவதற்கு சாத்தியக்கூறுகள் என்ன இருக்கின்றது என்பதை ஆராய்வதற்கு எங்களுக்கு அறிவுரைகள் வழங்கியதன் அடிப்படையில், நாங்களும் அதற்காக ஒரு இடத்தை கண்டறிந்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அந்த டெக்ஸ்டைல் பார்க்கானது மிக விரைவில் நம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

அந்த டெக்ஸ்டிடல் பார்க் வருவது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, இந்த கைத்தறி தொழிலை பொறுத்தவரைக்கும் நாம் இன்னும்; வேகமாக கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு துறை அலுவலர்கள் சரியான வழிகாட்டுதலை வழங்கி, அந்த நெசவாளர்களோட வாழ்க்கையை இனியும் கொஞ்சம் மேன்மேலும் சிறப்பிக்குமாறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

முன்னதாக, இந்த 8-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, நெசவாளர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை நேரில் பார்வையிட்டார்.அதனைத் தொடாந்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி, அமிர்தாபுரம் பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக நடைபெறும் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

இதில் கைத்தறி துறை உதவி இயக்குநர் ந.அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன், ஸ்ரீ கந்தன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.பி.கிருஷ்ணன் (பொதட்டூர்பேட்டை), தந்தை பெரியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் ஏ,இ.துளசிராமன், கைத்தறி ஆய்வாளர் திரு.சே.கலைவாணன், பல்வேறு கைத்தறி நெசவாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்