பதிவு:2022-08-09 22:04:49
மின்சார திருத்த மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேற்றுவதை கண்டித்து திருவள்ளூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஆக 09 : தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை பின்னோக்கி செல்லும் வகையில் மின்சார திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளதால் அதனை கண்டிக்கும்வகையில் இந்தியா முழுவதும் அனைத்து மின்வாரிய தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காக்களூரில் உள்ள திருவள்ளுர் துணை மின்நிலையம் அருகே மின்சாரத் தொழிலாளர் சம்மேளன தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர்.மதுசூதன்பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட தலைவர் சிட்டா வாசுதேவன். மணி. ஒ.டி.எஸ்.மணி. மற்றும் ஏராளமான மின்வாரிய தொழிலாளர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.