பதிவு:2022-08-09 22:08:09
75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றிட வேண்டும்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் தேசிய கொடி கிடைத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய கொடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) கல்பனா,சந்திரசேகர், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.