திருவள்ளூரில் விவாகரத்து கேட்டு நடந்த வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு: இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி :

பதிவு:2022-08-09 22:10:52

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எம் ஜி எம் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகளுக்கும் (பெயர் மாற்றப்பட்டது- பிரபாவதி )ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரவர்மா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இருவரும் திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று விவாகரத்து சம்பந்தமாக தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த இளம் பெண் தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில் மீண்டும் தீர்ப்பை மீண்டும் ஒத்தி வைத்ததால் மனமுடைந்த அவர் நீதிமன்றம் அருகிலேயே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.