பதிவு:2022-08-09 22:13:32
திருவள்ளூர் அடுத்த மேல கொண்டையூர் கிராமத்தில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் உயிரிழந்தன :
திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுக்காவிற்கு உட்பட்ட மேல கொண்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர் 6 பசு மாடுகளை வளர்த்து அதில் வரும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தனது பசு மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளி வழியாக ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது வயல்வெளியில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மழை காரணமாக அறுந்து கிடந்த மீன் கம்பியை சீர் செய்யக்கோரி கீழானூர் மின்வாரிய அலுவலகத்தில் ஏற்கனவே தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதில் சிக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
பசுமாட்டை நம்பி குடும்பம் நடத்தி வந்த நிலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து இரண்டு பசுமாடுகள் உயரிழந்ததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி மணி கேட்டுக்கொண்டார்.