திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை : கள்ளச்சந்தையில் இன்ஸ்பெக்டர் ஆதரவுடன் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க திருத்தணி காவல் நிலையத்திற்கு பிரிண்ட்டர் வாங்கி வந்த போது மர்ம நபர்கள் வெறிச் செயல் :

பதிவு:2022-08-09 22:24:35

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசிப்பவர் மோகன். 35 வயதான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். மோகன் திமுக ஆட்சிக்கு வந்து பிறகு அதில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துள்ளார். இவர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். திருத்தணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையை செய்து வந்துள்ளார். மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து பணத்தை வசூல் செய்து இன்ஸ்பெக்டரிடம் மோகன் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருத்தணியில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்ததாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் மோகனை கைது செய்யவில்லை . இந்நிலையில் மோகனை கைது செய்யாமலும், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க திருத்தணி காவல் நிலையத்திற்கு பிரிண்ட்ர் வாங்கித்தரவேண்டும் என இன்ஸ்பெக்டர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மோகன் தனது வீட்டுக்கு ஜெ.ஜெ.நகர் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இவனுக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் இவரை சரமாரியாக கத்தியில் முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார். இதனை அந்த பகுதி வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் பொதுமக்களுக்கும் மோகனின் உறவினருக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.

அதனை அடுத்து உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இறந்து போன மோகன் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறந்து போன மோகனிடம் திருத்தணி காவல் நிலையத்தில் லஞ்சமாக கம்ப்யூட்டருக்கு தேவையான சில பிரிண்டரை, வாங்கி வரச் சொல்லி உள்ளதும் தெரியவந்துள்ளது. அதனையேடுத்து இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது மோகன் தரப்பு உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.