திருமுல்லைவாயல், பனந்தோப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் :

பதிவு:2022-08-09 22:31:09



திருமுல்லைவாயல், பனந்தோப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் :

திருமுல்லைவாயல், பனந்தோப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், பனந்தோப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.113.84 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து குடிநீர் வழங்கும் நிலையம் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் துவக்கி வைத்து பேசினார்.

ஆவடியை பொறுத்தவரை அராபத்து ஏரி சரிசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். அந்த அராபத்து ஏரியை சரிசெய்து உங்களுக்கு சிறப்பான முறையில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.மேலும், இங்கு இருக்கும் இல்லத்தரசிகளுக்கு தண்ணீர் நேரடியாக இல்லந்தேடி வரும் திட்டம் 3,450 இல்லங்களுக்கு இன்றைக்கு கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இல்லங்கள் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் இதுபோன்று செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்கள். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை 8 ஆண்டு காலம் கட்டப்பட்டு, மெட்ரோவின் கீழ் இருந்து இப்போது மாநகராட்சி பெற்று சீர்செய்து இத்திட்டத்தை துவக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், பனந்தோப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.113.84 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து குடிநீர் வழங்கும் நிலையம் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை துவக்கி வைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும், ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்காக தலா ரூ. 7.30 இலட்சம் வீதம் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 32 இலகுரக வாகனங்களையும், பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக ரூ. 13.50 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட அடைப்புகள் நீக்கம் செய்யும் ஒரு வாகனத்தையும் என 33 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் தேசிய கொடி கிடைத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய கொடி விற்பனையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இதில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ்,ஆவடி மாநகராட்சி துணை மேயர் ச.சூரியகுமார், மண்டல குழுத் தலைவர் கோ.ராஜேந்திரன், அம்மு விஜயன், அமுதா பேபி சேகர், ஜோதி லட்சுமி நாராயண பிரசாத், மாநகராட்சி பணிக் குழுத் தலைவர் சா.மு.நா.ஆசிம்; ராஜா, கணக்கு குழுத் தலைவர் அ.வீரபாண்டியன், நியமன குழுத் தலைவர் டி.சுமதி, கல்விக்குழு தலைவர் யு.கீதா, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சி.சுந்தரி, பொது சுகாதாரத்துறை குழு தலைவர் க.ராஜேஷ்குமார், நகரமைப்பு குழு தலைவர் டி.மாலா, மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.