பதிவு:2022-08-10 16:54:38
திருவாலங்காட்டில் காளியம்மன் கோவில் உற்சவத்தின் கடைசி நாள் விழாவில் காளி அசுரர்களை வதம் செய்வது போன்று நாடகம் நடத்தி அம்மனை வழிபட்டனர் :
திருவள்ளூர் ஆக 10 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் காளியம்மன் உற்சவத்தின் கடைசி நாளான இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து படுகளம் நடந்தது.
அப்போது பக்தர்கள் அசுரர்கள் மனிதர்களை துன்புறுத்துவதை போன்று நாடகம் செய்தும், அரக்கன் வேடமணிந்து பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தனர். பின்னர் காளி அசுரர்களை வதம் செய்வது போன்று களம் அமைக்கப்பட்டது. இதையடுத்து திருக்குளத்தில் வேடங்கள் கலைக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.