பதிவு:2022-08-10 16:57:25
திருவள்ளூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4.100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் : தாலுக்கா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் அதிரடி
திருவள்ளூர் ஆக 10 : திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்ப்படுவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி. பெகர்லா செபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாலுக்கா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் காவலர்கள் ரகு மற்றும் அருண் ஆகியோர் திருப்பாச்சூர், சிறுவானூர் ஆகிய பகுதிகளில் கண்காணித்து வந்தனர்.
அப்போது, திருவள்ளூர் அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்பா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை செய்தனர். செந்தில் ஸ்டோர் என்ற கடையில் சோதனை செய்த போது, அங்கு வெள்ளை நிற சாக்கு பையில் எதையோ மறைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர் பிரையாங்குப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (51) எனபதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து 4.100 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த தாலுக்கா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், அரசால் தடை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை மற்றும் பான்பராக் பொருட்களை விற்பனை செய்ததாக செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.