பதிவு:2022-08-10 17:18:54
மதுரவாயில் வடிவேலு பட பாணியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் :
திருவள்ளூர் ஆக 10 : திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயில் பாரதியார் தெரு அரசு பள்ளி பின்புறம் சுமார் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இருந்து வந்தது.இந்த கிணற்றை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சமீப காலமாக மணல் கொட்டி அந்த கிணறு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல் அறியும் சங்கம் சார்பாக தேவேந்திரன் என்பவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் கிணற்றை கண்டுபிடித்து தருமாறு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரில் 70 ஆண்டுகளாக மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றை தற்போது சில சமூக விரோதிகள் ஆக்கமிப்பு செய்துள்ளதால் கிணறு இருந்த இடமே தடம் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே கிணற்றை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அழைத்துள்ளார். வடிவேல் பட பாணியில் கிணற்றை காணவில்லை என சமூக ஆவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.