பதிவு:2022-08-11 22:32:23
கிருஷ்ணசமுத்திரம்-ஆ கிராமத்தில் வரும் 26 ம் தேதி அன்றும்,பூண்டி கிராமத்தில் 28 ம் தேதி அன்றும் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
:திருவள்ளூர் ஆக 11 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கிருஷ்ணசமுத்திரம்-ஆ கிராமத்தில் வரும் 26.08.2022 அன்றும், திருவள்ளூர் வட்டம், பூண்டி கிராமத்தில் வரும் 28.09.2022 அன்றும் காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது.
அதுசமயம், அனைத்துத் துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக அளிக்கலாம்.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.