வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய திருவள்ளூர் கலெக்டர் வலியுறுத்தல் :

பதிவு:2022-08-11 22:36:21



வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய திருவள்ளூர் கலெக்டர் வலியுறுத்தல் :

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய திருவள்ளூர் கலெக்டர் வலியுறுத்தல் :

திருவள்ளூர் ஆக 11 : இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர்,வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடமிருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த 1.8.22 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கு பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 3657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6 பி-ல் Elector- facing Portal /Apps Like NVSP, VHA ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து படிவம் 6பில் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினைப் பெற்று இணைக்கப்பட வேண்டும். இப்பணியானது வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது. எனவே மேற்படி பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பினை நல்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டார்.