பதிவு:2022-08-12 10:24:14
திருவள்ளூரில் சென்னை உயர்நீதிமன்ற பிரிவு அலுவலர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் செயின் பறிப்பு : ஹெல்மெட் அணிந்து வந்து மர்ம நபர்கள் கைவரிசை :
திருவள்ளூர் ஆக 11 : சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு அலுவலராக வேலை செய்து வருபவர் உமா தேவி. (49). இவரது கணவர் கோவிந்தராஜூ. இவர்கள் நேற்று மகள் அமிர்தாவுடன் நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
இரவு 8 மணி ஆகிவிட்டதால் சாப்பிட்டுவிட்டு செல்ல நினைத்து திருவள்ளூர் மீரா திரையரங்கம் எதிரில் உள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர்.ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு உமாதேவி, அவரது கணவர் மகள் ஆகிய 3 பேரும் கார் நிறுத்திய இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூரிலிருந்து திருத்தணி நோக்கி செல்லும் சாலையில் கருப்பு நிற பல்சர் பைக்கில் வந்த 2 பேர் உமா தேவி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தனர். அப்போது உமாதேவி செயினை தனது கையால் அழுத்தி பிடித்ததால் இரண்டரை சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை உயர்நீதிமன்ற பிரிவு அலுவலர் உமாதேவி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவன் ஹெல்மெட் அணிந்திருந்ததும், பின்னால் உட்கார்ந்திருந்தவன் செயினை பறித்ததும் தெரியவந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.பொது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.