திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை : 23 மாணவிகள் டிசி வாங்கி சென்றனர் : 17 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறப்பு :

பதிவு:2022-08-12 10:31:32

திருவள்ளூர் ஆக 11 : திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சரளா விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில்சரளா கடந்த 25-ம் தேதி விடுதி ஹாலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 859 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் திருத்தணி அடுத்த தெக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 83 மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். மாணவியின் மரணத்தை தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்களிடமும விசாரணை நடத்தினர்.

மேலும் பிளஸ் 2 மாணவியின் மரணத்தை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் நிலை குறித்தும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் கல்வி கற்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு 17 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று பள்ளி திறக்கப்பட்டது. 859 மாணவிகளில் இன்று காலை வழக்கம் போல் 621 மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

மேலும் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் உள்ளிட்ட 23 பேர் மாற்றுச் சான்றிதழை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சில மாணவிகள் மாற்றுச் சான்றிதழை வாங்கி வேறு பள்ளியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவிகள் வீட்டிலிருந்து வந்தே படித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் கீழச்சேரியில் இருந்த விடுதி மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.