பதிவு:2022-08-12 10:45:28
75-ஆவது சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட சம்பவங்களின் புகைப்படக்கண்காட்சியை அஞ்சலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர் :
திருவள்ளூர் ஆக 11 : 75-ஆவது ஆண்டு சுதந்திரா அமிர்த பெருவிழா நாடெங்கிலும் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ் வகையில் நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது, ஏற்பட்ட கோர சம்பவங்களின் நினைவு நாளாக ஆக.14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளவும், நினைவு கூறும் நோக்கத்திலும் புகைப்பட தொகுப்பு அனைத்து அஞ்சல்துறை அலுவலகங்களில் காட்சிப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் திருவள்ளூர் உட்கோட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சியின்தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் உட்கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அஞ்சல் ஊழியரும், பாரதி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பார்த்தசாரதி பங்கேற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரிவினையின் ஏற்பட்ட கோர சம்பவங்கள் இடம்பெற்றுள்ள புகைப்படக் கண்காட்சியை அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.