திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சென்ற 7 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம் :

பதிவு:2022-08-12 13:04:13

திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா(29).தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி முத்தமிழ் (வயது 26) என்ற மனைவி உள்ளார்.இத் தம்பதியருக்கு ஜோசன் என்கின்ற 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், லூவி டெரினா என்ற 7 மாத பெண் கை குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27 ம் தேதியன்று குணா தன் மனைவி முத்தமிழ் மகன் ஜோசன், 7 மாத கைக்குழந்தை லூவி டெரினாவுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றனர்.பின்னர் தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் தங்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது முத்தமிழ் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா கீழே வீழ்ந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.